வரலாற்றில் இன்று...
30/12/2018 இந்திய சுதந்திர வரலாற்றில் மறக்க முடியாத நாள்...
டிசம்பர் 29, 1943 அன்று நேதாஜி அவர்கள் திரு. சர்வஸ்ரீ ஆனந்த் மோகன் சஹாய், கேப்டன் ராவத் – ADC, கர்னல் டி.எஸ். ராஜு மற்றும் நேதாஜியின் தனிப்பட்ட மருத்துவர் ஆகியோருடன் அந்தமானில் உள்ள போர்ட் ப்ளேர் விமான நிலையத்தில் இறங்கினார். போர்ட் பிளேயரில் ஜப்பானிய அட்மிரல் அவரை வரவேற்றார். மேலும் இந்தியர்களும், பர்மீயர்களும் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.
மறுநாள் அதாவது, டிசம்பர் 30, 1943 அன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போர்ட் பிளேரில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் (தற்போது நேதாஜி ஸ்டேடியம்) முதல் தடவையாக இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஏற்றிவைத்த பிறகு நேதாஜி அவர்கள் அந்தமான் நிகோபார் தீவுகளை பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட முதல் இந்தியப் பகுதி எனவும் அறிவித்து சுதந்திர பிரகடனம் செய்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் அந்தமான் தீவை “ஷஹீத்” எனவும் மற்றும் நிக்கோபார் தீவை “ஸ்வராஜ்” என்றும் பெயரிட்டார். INA வின் ஜெனரல் திரு. AD லோகநாதன் அவர்களை அந்தமான் தீவுகளின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
“ஆசாத் ஹிந்த்” அரசாங்கம் வெறுமனே ஒரு அரசாக இல்லாமல் அதற்கென்று தனி எல்லை, சொந்த நாணயம், சிவில் கோட் மற்றும் ஸ்டாம்ப்கள் வெளியிடப்பட்டது. அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.
சுதந்திரம் நமக்கு கிடைத்துவிட்டாலும் சுபாஷ் சந்திரபோஸ் கண்ட கனவு இந்தியாவை நிர்மாணிப்பதற்கு இன்னும் நெடிய தூரம் செல்ல வேண்டி உள்ளது.
ஜெய்ஹிந்த்!
நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர்
நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர்
https://www.facebook.com/nethajiilaingarsangam
No comments:
Post a Comment