Monday, 24 December 2018

Observed 222 nd death anniversary of Veeramangai Velunachiyaar








சுதந்திர போராட்ட வரலாற்றில் இழந்த நாட்டை மீட்ட ஒரே ராணி, வீரத்தாய், பேரரசி மு. வேலுநாச்சியாரின் 222 வது நினைவேந்தலை முன்னிட்டு நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர் தனது அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சிவகங்கை மண்ணில் செலுத்தி தனது சமுதாய கடமையை செவ்வனே செய்தது.

மு.வேலு நாச்சியார் (1730- 1796)...வெள்ளையனை எதிர்த்து போரிட்ட முதல் பெண் அரசி...

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டப்பெண் ஜான்சி ராணி (கி .பி 1835-1858 ) காலத்திற்கு முன்னரே வெள்ளையனை எதிர்த்து போரிட்ட முதல் பெண் அரசி வேலு நாச்சியார் 25-12-1796 -இல் வீர மரணமடைந்தார்.
ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வெற்றியும் பெற்ற முதல் பெண்மணி.
உலகில் வேறு எந்த ராணியும் வேலுநாச்சியார் வீரத்திற்கும் அரசியல் விவேகத்திற்கும் இணை இல்லை.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர். சிறு வயதிலேயே போர்க்கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர்.

ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாக இருந்தவர். 1790ல் தனது மகள் இறந்த பிறகு வேதனையால் நோய்வாய்பட்டவர் 1796ல் டிசம்பர் 25ல் இறந்தார்.
இறக்கும் முன் மருது சகோதரர்களை தனது வாரிசாக அறிவித்து சிவகங்கையை ஒப்படைத்தார். 

சிவகங்கை சிம்சானத்திற்க்கு என்றும் உரிய எங்களின் வீரத்தாயே! உன்னை வணங்குகிறோம்.

பெருமையான நினைவுகளுடன் ...
வீரவணக்கம்!வீரவணக்கம்!
நேதாஜி இளைஞர் சங்கம், பார்த்திபனூர்.



No comments:

Post a Comment

கள்ளர் சரித்திரம்

கள்ளர் சரித்திரம்                                           இரண்டாம் பதிப்பின் முகவுரை. குடி செய்வ லென்னு மொருவற்குத் தெய்வம் மடிதற்று...