இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, பார்த்திபனூர் அருகில் உள்ள அருங்குளம் கிராமத்தில் நடந்த இருபிரிவினர்களுக்கு இடையிலான பிரச்சினையில் பார்த்திபனூர் காவல்துறை ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்டு அப்பாவி தேவர் சாதி பொதுமக்களை அடித்தும், வீடுகளை உடைத்தும், பெண்களின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியும் சட்டத்தை காக்க வேண்டியவர்களே அராஜகம் செய்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் முதல்வருக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், மனித உரிமை கமிஷனுக்கும் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளனர்.
இந்த சட்ட விரோதமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
No comments:
Post a Comment