Saturday, 29 December 2018

Observed "Natural Agriculture scientist" Nammazhvaar's 6 th Memorial Day



'இயற்கை வேளான் விஞ்ஞானி' ஐயா கோ. நம்மாழ்வார் அவர்களின் 6 வது நினைவு நாளில் நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர் தனது வீரவணக்கத்தை காணிக்கையாக்குகிறது.

ஐயா விட்டுச் சென்ற வழியில் இந்த பூமிப்பந்தை காப்போம் என ஒவ்வொருவரும் சபதம் செய்வதுதான் நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.

Nethaji hoisted Indian flag at first in Andaman




வரலாற்றில் இன்று...
30/12/2018 இந்திய சுதந்திர வரலாற்றில் மறக்க முடியாத நாள்...

டிசம்பர் 29, 1943 அன்று நேதாஜி அவர்கள் திரு. சர்வஸ்ரீ ஆனந்த் மோகன் சஹாய், கேப்டன் ராவத் – ADC, கர்னல் டி.எஸ். ராஜு மற்றும் நேதாஜியின் தனிப்பட்ட மருத்துவர் ஆகியோருடன் அந்தமானில் உள்ள போர்ட் ப்ளேர் விமான நிலையத்தில் இறங்கினார். போர்ட் பிளேயரில் ஜப்பானிய அட்மிரல் அவரை வரவேற்றார். மேலும் இந்தியர்களும், பர்மீயர்களும் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.
மறுநாள் அதாவது, டிசம்பர் 30, 1943 அன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போர்ட் பிளேரில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் (தற்போது நேதாஜி ஸ்டேடியம்) முதல் தடவையாக இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஏற்றிவைத்த பிறகு நேதாஜி அவர்கள் அந்தமான் நிகோபார் தீவுகளை பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட முதல் இந்தியப் பகுதி எனவும் அறிவித்து சுதந்திர பிரகடனம் செய்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் அந்தமான் தீவை “ஷஹீத்” எனவும் மற்றும் நிக்கோபார் தீவை “ஸ்வராஜ்” என்றும் பெயரிட்டார். INA வின் ஜெனரல் திரு. AD லோகநாதன் அவர்களை அந்தமான் தீவுகளின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
“ஆசாத் ஹிந்த்” அரசாங்கம் வெறுமனே ஒரு அரசாக இல்லாமல் அதற்கென்று தனி எல்லை, சொந்த நாணயம், சிவில் கோட் மற்றும் ஸ்டாம்ப்கள் வெளியிடப்பட்டது. அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.
சுதந்திரம் நமக்கு கிடைத்துவிட்டாலும் சுபாஷ் சந்திரபோஸ் கண்ட கனவு இந்தியாவை நிர்மாணிப்பதற்கு இன்னும் நெடிய தூரம் செல்ல வேண்டி உள்ளது.
https://www.facebook.com/nethajiilaingarsangam


letter to Polimer TV




தேவர் சாதியை பற்றி உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்ட பாலிமர் தொலைக்காட்சிக்கு நேதாஜி இளைஞர் சங்கம் தனது கண்டனத்தை கடிதம் வாயிலாக தெரிவித்தது.

Carry out blood test for blood donation camp.










நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர் -ன் உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வரும் ஜனவரி 23 -ம் தேதியன்று, தேசப்பிதா நேதாஜி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இரத்த தானம் செய்ய ஏதுவாக இன்று பார்த்திபனூர் அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை செய்கின்றனர்... வாழ்த்துக்கள் 🔥🔥💪💪🔰🔰

Tuesday, 25 December 2018

4 th death anniversary of Maaveran S.R Tamizhan




தமிழக நேதாஜி ‘மாவீரன்’ SR.தமிழன் M.A., LLB., -ஒரு சகாப்தம்.. 

தேனி மாவட்ட மயிலாடும்பாறை அருகில் உள்ள கோரையூத்து என்ற கிராமத்தில் திரு.செவ்வாலைராஜா அவர்களின் மூத்த மகனாக பிறந்த தமிழன் சிறுவயது முதலே தனது கிராம விளையாட்டு குழுக்களுக்கும் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கும் தலைவனாக செயல்பட்டவர்.

சிறுவயது முதலே சமுதாயம் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக விளங்கினார். M.A படிப்பினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முடித்தவர் பின்பு தனது சட்ட படிப்பினை பெங்களூரில் தொடங்கினார்.

இதற்கிடையே தனது சமுதாய, சமூகப் பணிகளை தொடங்கும் பொருட்டு, தேனி மாவட்ட பிரமலைக் கள்ளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அச்சங்க செயல்பாடுகளில் திறன்பட செயலாற்றி, அச்சங்க உறுப்பினர்களிடமும் நன்மதிப்பினை பெற்று சங்கத்தின் பல்வேறு நிர்வாக பொறுப்புகளை வகித்தார். 

தேனி மாவட்ட பிரமலை கள்ளர் சங்கத்தினை தேனி மாவட்டம் முழுவதும் பரவியிருக்கின்ற கள்ளர் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து சங்கத்தினை வளர்ச்சி பாதைக்கு இட்டுசென்றார். இது இவரின் அரசியல் பணிக்கு  அடித்தளம் இட்டது. இதை தொடர்ந்து, 2006 ல் BT அரசகுமாரின் திராவிட விழிப்புணர்ச்சிக் கழகத்தில் இணைந்த SR. தமிழன், அக்கட்சியின் தேனி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்பு, 2009 ல் தனது கட்சியினை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் கட்சியில், தமிழ் மாநில பொதுசெயலர்  திரு. PV. கதிரவன் முன்னிலையில் ஃபார்வர்டு ப்ளாக் கட்சியில் இணைந்து தனக்கே உரித்தான பானியில் திறன்பட செயல்பட்டு ஃபார்வர்டு ப்ளாக்கினை தேனி மாவட்டம் முழுவதும் பரவச் செய்தார்.

2010 ல் இவரின் அதிதீவிரசெயல்படுகளை பார்த்த மாநில தலைமை, தேனி மாவட்ட பொது செயலராக நியமித்தது. இதனை தொடந்து இவரின் செயல்பாடுகளினால் தேனி மாவட்டத்தில் கிட்ட தட்ட எல்லா கிராமம் மற்றும் நகரங்களில் புலிக்  கொடி பட்டொளி வீசி பறக்க தொடங்கியது. 
2011-ல் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி அகிலஇந்திய ஃபார்வர்டு ப்ளாக்கின் மாவட்ட மாநாட்டினை சிறப்பாக நடத்தினர். இந்த மாநாட்டு நிகழ்வுக்கு பின்பு, தேனி மாவட்ட தேவரின மக்களின் கவனம் இவர் மேல் முழுவதும் திரும்பியது. தொடர்ந்து, இவர் தனது துடிப்பான. கட்சி பணிகளால், மாநில இளைஞரணி செயலராக 2012 ல் நியமிக்கப்பட்டார். பின்பு 2013 சென்னையில் நடைபெற்ற அகிலஇந்திய ஃபார்வர்டு ப்ளாக்கின் அகில இந்திய மாநாட்டில், மத்திய குழு உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். தொடந்து தேனி மாவட்ட முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி. நகரம், ஒன்றிய, மற்றும் தொகுதி செயலாளர்களை நியமித்து கட்சியை பலப்படுத்தினார். இவரின் இச்செயல்பாடு தேனி மாவட்ட திராவிட கட்சிகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியது. 

தேனி மாவட்டத்தில் தேவரின சமுதாய மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் எந்த நேரமாக இருந்தாலும் நேரடியாக வந்து தீர்த்து வைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு தேவரின இளைஞர்களின் வரவேற்பினை பெற்றார். அது மட்டுமில்லாமல் தேனி மாவட்ட பொதுமக்களின் வாழ்வதார ஆக்கபூர்வமான அடிப்படை பிரச்சினைகளை தனக்கே உரித்தான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று அதில் வெற்றியும் கண்டார். அதில் பொதுமக்களுக்குஅதிகம் பயன்படும் மருத்துவம், குடிநீர், திட்ட சாலைகள். விவசாயிகளின் பிரச்சனைகள். முல்லைப் பெரியார் பிரச்சனைகள் மற்றும் கேரளா தமிழர்களுக்கானஅதரவு போராட்டங்கள் ஆகிய பல்வேறு மக்கள் அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி தனது அரசியல் பணிகளை மேற்கொண்டார். 

இவரின் வளர்ச்சியினை கண்டு சீரணிக்க முடியாத அதிகாரவர்கம் இவர் மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைத்தது. இவரை சிறையில் அடைத்ததினை அறிந்த 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு எதிர்ப்பினை காட்டியதன் விளைவாக பின்பு 7 நாட்களில் விடுதலை செய்யப்பட்டார். பின்பு இவர் மக்கள் நலப் போராட்டங்களுக்காக தேனி மாவட்டம் முழுவதும் அதிதீவிரமாக செயல்படத் தொடங்கினார். இதனை தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களிடையே ஒரு இனக்கமான சமத்துவ சூழ்நிலை உருவாக காரணமாக இருந்தார். தேனி மாவட்டத்தில் அனைத்து சமுதாய மக்களின் ஆதரவு மேலும் மேலும் பெருகியது.

 இதை பொறுத்துக் கொள்ள முடியாத அதிகாரவர்கம் தொடர்ந்து இவரின் கட்சி மாநில பொதுசெயலர் மூலமாக இவர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. இதை மீறி தனது மக்கள் நலபோராட்டங்களை தொடர்ந்ததின் விளைவாக இவர் சார்ந்த. கட்சியின்  மாநில பொதுசெயலர், அதிகாரவர்கத்தின் அழுத்தத்தின் காரணமாக இவரை கட்சியின்  அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியதாக அறிவித்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் தமிழ் மாநில தலைவர் PKM. முத்துராமலிங்கம், ஃபார்வர்டு ப்ளாக்கின் தமிழக பொதுசெயலர் தன்னிச்சையாக SR.தமிழனை நீக்கியது செல்லாது என அறிவித்தார். இந்த உட்கட்சி மோதல்களுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற மத்திய குழுவின் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டு SR தமிழன் நீக்கம் செல்லாது என மீண்டும் அறிவிக்கபட்டது. 

கூட்டத்தினை வெற்றியுடன் முடித்துவிட்டு, தனது சட்டபடிப்பு தேர்வு எழுத பெங்களூரில் தங்கியிருந்த ‘மாவீரன்’ SR.தமிழன் 26.12.14 அன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.. அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும் பொதுமக்கள் ஒருபுறம் கருதுகின்றனர். 

ஒரு மாவீரன், மக்கள் நலத் தொண்டன், முக்குலத்து காவலனின் மறையா புகழினை நாம் தலைவணங்கி போற்றுவோம்! மாவீரா! நீ மீண்டும் பிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 

மீள முடியாத ஆழ்ந்த துயரத்தில், கனத்த இதயங்களுடன்... வீரவணக்கம்! வீரவணக்கம்!
நேதாஜி இளைஞர் சங்கம், பார்த்திபனூர்.


Monday, 24 December 2018

Observed 222 nd death anniversary of Veeramangai Velunachiyaar








சுதந்திர போராட்ட வரலாற்றில் இழந்த நாட்டை மீட்ட ஒரே ராணி, வீரத்தாய், பேரரசி மு. வேலுநாச்சியாரின் 222 வது நினைவேந்தலை முன்னிட்டு நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர் தனது அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சிவகங்கை மண்ணில் செலுத்தி தனது சமுதாய கடமையை செவ்வனே செய்தது.

மு.வேலு நாச்சியார் (1730- 1796)...வெள்ளையனை எதிர்த்து போரிட்ட முதல் பெண் அரசி...

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டப்பெண் ஜான்சி ராணி (கி .பி 1835-1858 ) காலத்திற்கு முன்னரே வெள்ளையனை எதிர்த்து போரிட்ட முதல் பெண் அரசி வேலு நாச்சியார் 25-12-1796 -இல் வீர மரணமடைந்தார்.
ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வெற்றியும் பெற்ற முதல் பெண்மணி.
உலகில் வேறு எந்த ராணியும் வேலுநாச்சியார் வீரத்திற்கும் அரசியல் விவேகத்திற்கும் இணை இல்லை.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர். சிறு வயதிலேயே போர்க்கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர்.

ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாக இருந்தவர். 1790ல் தனது மகள் இறந்த பிறகு வேதனையால் நோய்வாய்பட்டவர் 1796ல் டிசம்பர் 25ல் இறந்தார்.
இறக்கும் முன் மருது சகோதரர்களை தனது வாரிசாக அறிவித்து சிவகங்கையை ஒப்படைத்தார். 

சிவகங்கை சிம்சானத்திற்க்கு என்றும் உரிய எங்களின் வீரத்தாயே! உன்னை வணங்குகிறோம்.

பெருமையான நினைவுகளுடன் ...
வீரவணக்கம்!வீரவணக்கம்!
நேதாஜி இளைஞர் சங்கம், பார்த்திபனூர்.



Sunday, 23 December 2018

Tribute to S.R Tamizhan



A tribute to the great leader "Tamilnadu Nethaji" Maveeran S.R Tamizhan who lived and gave his last breath for the public...Salute to the hero of the public.

Distribution of Calender










எம் இனத்தின் உறவுகளுக்கு 2019 வருடத்திற்கான காலண்டர் வழங்கப்பட்டது..

Introduction of Flag


பெரும்பான்மையான மக்கள் ஆசைப்பட்டதற்கிணங்க நேதாஜி இளைஞர் சங்கம், பார்த்திபனூரின் கொடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறது‌. வாக்களித்த அனைவருக்கும் நன்றி. உயர பறக்கட்டும் நமது குறிக்கோள் போல.. பட்டொளி வீசட்டும் நமது முன்னோர்கள் போல.

Monday, 17 December 2018

Honourable Periya Marudhu's 270 th birth anniversary celebration







நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர், மாவீரர் பெரிய மருது 270 வது பிறந்தநாள் தினத்தை இன்று சிறப்பாக கொண்டாடியது.

Nethaji Ilaingar Sangam Parthibanur has celebrated 270 th birth anniversary of the great warrior Periya marudhu on 15/12/2018 in befitting manner.


Meeting with Honorary advisor and Legal advisor



.
நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக இன்று சங்கத்தின் கௌரவ ஆலோசகர் 
திரு. சு. புதுமலர் பிரபாகரன், மாநில அமைப்பாளர், மறத்தமிழர் சேனை மற்றும் சட்ட ஆலோசகர் அவர்களை சந்தித்து சங்கத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்தார்கள்.

Wednesday, 12 December 2018

Bank Account



அன்பார்ந்த உறவினர்களே, முக்குலத்து சொந்தங்களே! இளைஞர்களை கொண்டு சமுதாய பணிகள் செய்ய ஆரம்பித்திருக்கும் நேதாஜி இளைஞர் சங்கம் பார்த்திபனூர் க்கு நன்கொடை வழங்கி உங்களையும் சமுதாய பணிகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Monday, 3 December 2018

Identity Card




நேதாஜி இளைஞர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

Sangam Registration


நேதாஜி இளைஞர் சங்கத்தை 23/12/18 அன்று முறைப்படி பதிவு செய்யப்பட்டது. சங்கத்தின் செயல் வீரர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.   

கள்ளர் சரித்திரம்

கள்ளர் சரித்திரம்                                           இரண்டாம் பதிப்பின் முகவுரை. குடி செய்வ லென்னு மொருவற்குத் தெய்வம் மடிதற்று...